Saturday 12 December 2015

ஜோதிடம் ஒரு கலை

வணக்கம்......!!!

ஜோதிடம் என்பது ஆய கலைகள் அறுபத்து நான்கில் ஒன்று.

பிரமனால் தோற்றுவிக்கப்பட்டு வழி வழியாய் வந்த ஜோதிடம் இன்று, இவர்தாம் கற்க வேண்டும் என்றில்லாமல் அனுபவ முறையில் பலராலும் கற்கப்பட்டு அதில் பலரும் பயனடைந்துகொண்டிருக்கின்றனர்.


அதில் என்னால்  இயன்ற பல நல்ல கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவே இந்த
இணையதளம் தொடங்கப்பட்டிருக்கிறது...!!



ஜோதிடத்தின் நாயகர்கள் ஒன்பது பேர்....

சூரியன்
சந்திரன்
புதன்
செவ்வாய்
குரு
சுக்கிரன்
சனி
ராகு
கேது

இவர்கள் தாம் பூமியின் நிகழ்வுகளுக்கு காரணகர்த்தாக்கள்...

 அப்படியானால்  இவர்கள் தான் கடவுளா? இவர்களை வணங்கினால் போதுமா? என கேள்விகள் எழலாம்.

இவர்கள் கடவுளின் பிரதிநிதிகள். கடவுளால் நியமிக்கப்பட்டவர்கள்.

எதற்க்கு இந்த நியமனம்?

   ஆன்மாக்களின் பிறப்பு சுழற்ச்சியை நிர்வகிப்பவர்கள் (They are the governors of soul cycle). ஆன்மாவானது ஒரு பிறவியில் செய்த வினைகளுக்கு ஏற்ப்ப மறு பி்றவி எடுக்கிறது. அதற்கு ஏற்ற வினைப்பயன்களை அள்ளி வழங்குவது இந்த நவகிரகங்களே.


அரசனாக இருந்தாலும் இன்பமும் வரும் துன்பமும் வரும். ஏனெனில் இவைகளுக்கு பாரபட்சம் பார்க்க தெரியாது. செய்த வினைப்பயனை ஒருவன் அனுபவித்தே ஆக வேண்டும், ”உப்புத் திண்ணவன் தண்ணி குடிச்சுதான் ஆகனும்” என்பது தான் நவகிரகங்களின் கொள்கை.

 நன்றி !!!!

.